/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை': கவலையில் பண்ணை பணியாளர்கள்
/
'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை': கவலையில் பண்ணை பணியாளர்கள்
'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை': கவலையில் பண்ணை பணியாளர்கள்
'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை': கவலையில் பண்ணை பணியாளர்கள்
ADDED : நவ 06, 2025 11:03 PM

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையில் பணியாற்றும் நிரந்தர பண்ணை பணியாளர்களுக்கு, சம்பளம் தாமதமாக வழங்குவதால் பாதிக்கப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலை துறையின் கீழ், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, கல்லாறு பழ பண்ணை, தும்மனட்டி, நஞ்சநாடு, தேவாலா தோட்டக்கலை பண்ணைகள், குன்னுார் பழவியல் நிலையம், தேயிலை பூங்கா ஆகியவை உள்ளன.
இந்த துறையில், பணிவரன்முறை செய்யப்பட்ட நிரந்தர பண்ணை பணியாளர்கள், 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலைக்கு ஏற்ப இவர்களுக்கு அரசின் கிடைக்க வேண்டிய சலுகைகள் உரிய முறையில் கிடைக்காத நிலை நீடிக்கிறது. பண்ணை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி கொடை ஓய்வூதியம் என எதுவும் இல்லை.
40 ஆண்டுகளாக பணியாற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவில்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத நிலையே நீடிக்கிறது.
மாத இறுதியில் 31ம் தேதி சம்பளம் வழங்க வேண்டிய நிலையில், அடுத்த மாதம் 6, 7 என தேதிகள் ஆனாலும் சம்பளம் வழங்காததால், தோட்டக்கலை பண்ணை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பண்ணை பணியாளர்கள் கூறுகையில், 'கடந்த மாதத்திற்கான சம்பளம், 6ம் தேதி ஆகியும் வழங்காமல் உள்ளனர். சம்பளம் தாமதமாவதால் ஏற்கனவே குடும்பத்தினர் வாங்கிய பல்வேறு கடன்கள் குறிப்பிட்ட காலத்தில் செலுத்த முடிவதில்லை.
அரசு உத்தரவின் படி பண்ணை பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் முறையாக வழங்கவும், மற்ற அரசு ஊழியர்களுக்கு உரிய தேதியில் வழங்குவது போல் சம்பளம் வழங்கவும் வேண்டும்' என்றனர்.

