/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகளவில் மர கன்று தயார் செய்ய அறிவுரை
/
அதிகளவில் மர கன்று தயார் செய்ய அறிவுரை
ADDED : செப் 07, 2025 09:01 PM
குன்னுார்; 'அதிகளவிலான மர கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும்,' தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவுரை வழங்கினார்.
'கடநாடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன குன்னுார் நாற்றங்கால் பண்ணையில், 3.44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஜகர்தண்டா, நாவல், காபி மற்றும் ஸ்பேதோடியா,' என, 2,870 மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 4,052 மரக்கன்று தயார் நிலையில் உள்ளது.
'கூடுதல் வட்டார நாற்றங்கால், பண்ணையில், 3.66 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜகர்தண்டா, நாவல் காபி, ஸ்பேத்தோடியா, எலுமிச்சை, விக்கி கொய்யா, நெல்லிக்காய், பேரி,' என, 3,282 நாற்றுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. 2,608 நாற்றுகள் தயார் நிலையில் உள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சின்ன குன்னுார் நர்சரியில், 7.60 ரூபாய் லட்சுமி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு மேற்கொண்டு, அதிகளவிலான மர நாற்றுக்களை உற்பத்தி செய்ய தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், உட்பட அரசு துறையினர் பங்கேற்றனர்.