/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சூரல்மலையில் களையிழந்த ஓணம் பண்டிகை
/
சூரல்மலையில் களையிழந்த ஓணம் பண்டிகை
ADDED : செப் 07, 2025 09:01 PM
பந்தலூர்; சூரல்மலை பகுதிகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டதால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்ததால், ஓணம் பண்டிகை களை இழந்தது.
தமிழக- கேரளா எல்லையான, பந்தலுார் அருகே, கேரளா வயநாடு மாவட்டம் மேபாபாடி சுற்று வட்டார பகுதிகளில், தமிழ், மலையாளம், கன்னடம் பேசும் மக்கள் வசிக்கின்றனர். சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் சிவன் கோவில் மற்றும் பள்ளிவாசல் உள்ள நிலையில் அனைத்து மத பண்டிகைகளும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் இங்குள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களிலும், ஓணம், மிலாது நபி நிகழ்ச்சிகள் ஓரே நாளில் நடந்த நிலையில் உறவுகளை இழந்த மக்கள், ஓணம், மிலாது நபி நிகழ்ச்சிகளை எளிமையாக கொண்டாடினர்.
கிராம மக்கள் கூறுகையில், 'இது போன்ற பண்டிகை காலங்களில் அனைவரும் விடுமுறையில் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வயநாடு பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்த பகுதியில், நிலச்சரிவு பாதிப்பால் எங்கள் உறவுகளை இழந்ததால் நாங்கள் சோகத்தை மட்டுமே தற்போதும் அனுபவித்து வருகிறோம்,'என்றனர்.