/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் இடமாற்றம்
/
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் இடமாற்றம்
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் இடமாற்றம்
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் இடமாற்றம்
ADDED : செப் 07, 2025 09:01 PM
கூடலூர்; தமிழகத்தில் பணியாற்றி வரும், 19 ஐ.எப்.எஸ்., வன அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனராக பணியாற்றி வந்த வித்யா, கோவை தமிழ்நாடு வன அகடாமி துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி வரையாடு திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த கணேசன், ஐ.எப்.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, முதுமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். முதுமலை மசினகுடி கோட்ட துணை இயக்குனராக பணியாற்றி வந்த அருண்குமார், ஐ.எப்.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, தேனி மாவட்ட வன அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வனவிலங்கு காப்பாளர் வித்யாதர் மசினகுடி கோட்ட துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.