/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவியருக்கு அறிவுரை
/
மின் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவியருக்கு அறிவுரை
மின் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவியருக்கு அறிவுரை
மின் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவியருக்கு அறிவுரை
ADDED : டிச 23, 2025 07:00 AM
குன்னுார்: குன்னுார் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் மின்வாரிய துறை சார்பில் மின்சிக்கன வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை தலைமை வகித்தார்.
குன்னுார் உதவி மின் பொறியாளர் ஜான்சன் பேசுகையில்,''ஆண்டுதோறும் டிச., 14 முதல் 20 வரை மின்சிக்கன வார நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அனைவரிடமும் அவசியம். தேவையான நேரத்தில் மட்டுமே மின்சார பல்புகளை பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளி உள்ள மற்ற நேரங்களில் இவற்றை அவசியமின்றி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மழை காலங்களில் மின் கம்பங்களையும் தொடக்கூடாது. மின்சார கம்பிகள் அருகே மரக்கிளைகள் சாய்ந்திருந்தாலும் தொடக்கூடாது. கால்நடைகளை மின் கம்பங்களில் கட்டி வைப்பது தவறு. மின்சார சிக்கனம் குறித்து மாணவிகள் பெற்றோரிடமும் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.