/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைப்பாதையில் வாகனம் ஓட்ட சிரமம் ஒளிரும் விளக்கு பொருத்த வலியுறுத்தல்

ADDED : டிச 23, 2025 07:00 AM
குன்னுார்: குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், அடிக்கடி கடும் மேகமூட்டமான காலநிலை நிலவுவதன் காரணமாக, இருபுறங்களிலும் வெள்ளைகோடு வரைந்து, ஒளிரும் விளக்குகள் பொருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தற்போது, இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் பனிமூட்டம் மற்றும் மேகமூட்டம் அதிகமாக உள்ளது. நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் பெரும்பாலான இடங்களில் வெள்ளை கோடுகள் இல்லை.
ஒரு சில இடங்களில் மட்டும் வரைந்த வெள்ளைக்கோடு சாதாரண நாட்களில் கூட டிரைவர்களுக்கு தெரியாத வகையில் உள்ளது. இதனால், மலை பாதையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தமிழக நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனம் பழுது பார்ப்போர் நல சங்க மாநில பொதுச் செயலாளர் ஹேன்குமார் கூறுகையில்,''குன்னுார்-- மேட்டுப்பாளையம் மலைபாதையில், பெரும்பாலும் மேகமூட்டத்தால், சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க அதிகம் சிரமப்படுகின்றனர். சாலையின் நடுவில் மட்டுமே வெள்ளைக்கோடு உள்ளது. இருபுறங்களிலும் முழுமையாக தெரியும் வகையில் வெள்ளைகோடு வரைந்து, ஒளிரும் விளக்குகளும் பொருத்த வேண்டும்,'' என்றார்.