/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேமராவில் பதிவான காட்டு யானை 'ரிவால்டோ' நேரடியாக பார்க்க வன ஊழியர்கள் முயற்சி
/
கேமராவில் பதிவான காட்டு யானை 'ரிவால்டோ' நேரடியாக பார்க்க வன ஊழியர்கள் முயற்சி
கேமராவில் பதிவான காட்டு யானை 'ரிவால்டோ' நேரடியாக பார்க்க வன ஊழியர்கள் முயற்சி
கேமராவில் பதிவான காட்டு யானை 'ரிவால்டோ' நேரடியாக பார்க்க வன ஊழியர்கள் முயற்சி
ADDED : டிச 23, 2025 07:00 AM

கூடலுார்: மசினகுடி பொக்கா புரம் பகுதியில், கேமரா வில் பதிவான ரிவால்டோ யானையை நேரடியாக பார்க்கும் முயற்சியில் வன ஊழியர்கள் ஈடு பட்டுள்ளனர்
முதுமலை மசின குடியில் காட்டு யானை ரிவால்டோ,45, என்ற பெயருடன் காட்டு யானை உலா வந்தது. அதன் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் குறைபாடு காரணமாக வனப் பகுதிக்கு செல்லாமல் குடியிருப்பு, சாலையோரங்களில் உலா வந்ததுடன் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தியது. சுற்றுலா பயணிகள் இடையூறு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, 2021மே மாதம், யானைக்கு மயக்க ஊசி செலுத்தாமல், பழங்கள் கொடுத்து, அப்பகுதியில் அமைக்கப்பட்ட, கராலில் வரவழைத்து அடைத்து, சிகிச்சை அளித்தனர்.
அரசு அமைத்த குழுவினர் யானையின் உடல் நிலையை ஆய்வு செய்து, அதனை வனத்தில் விட பரிந்துரை செய்தனர். தொடர்ந்து, ஆக., மாதம் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி, முதுமலை வனத்தில் விடுவித்தனர். அடுத்த நாளில் யானை மசினகுடிக்கு வந்தது. அதனை வனக்குழுவினர் கண்காணித்து வந்தனர்.
இதனிடையே அதன் கழுத்திருந்து ரேடியோ கலர் கீழே விழுந்துவிட்டது. இந்நிலையில், அக்., 20 முதல், யானை வழக்கமான பகுதியில் தென்படவில்லை. தொடர்ந்து, மசினகுடி, முதுமலை வனப்பகுதிகளில் அதனை தேடி வந்தனர். யானை குறித்து பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, வந்ததால் வனத்துறைக்கு அழுத்தம் அதிகரித்தது.
இந்நிலையில், பொக்காபுரம் வனப்பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில், டிச., 8ல் யானையின் உருவம் பதிவானதை பார்த்து, வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து, 'டிரோன்' கேமரா உதவியுடன், யானையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'அக்., 20 முதல் , காட்டு யானை ரிவால்டோ தன் வாழ்விட பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு சென்று மறைந்த நிலையில், தற்போது பொக்காபுரம் பகுதியில் இருப்பது, தானியங்கி கேமராவில் பதிவான அதன் போட்டோ மூலம் யானை இப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை நேரடியாக கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்,' என்றனர்.

