/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் நாய் பராமரிப்பு பூங்கா திறப்பு
/
ஊட்டியில் நாய் பராமரிப்பு பூங்கா திறப்பு
ADDED : டிச 22, 2025 09:42 AM

ஊட்டி: ஊட்டியில், மாநிலத்தில் முதல் முறையாக, வளர்ப்பு நாய்களுக்கான பராமரிப்பு பூங்கா திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு, சுற்றுலா பயணியர், செல்ல பிராணியான நாய்களை அழைத்து வருகின்றனர். இங்குள்ள பூங்காக்கள் மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட மையங்களுக்கு சுற்றுலா பயணி யர் நாய்களை அழைத்து செல்ல அனுமதி இல்லை.
இதை தவிர்க்கும் வகையில், ஊட்டி மரவியல் பூங்காவில், நாய்களுக்கு பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நாய் வளர்ப்பவர்கள் அவற்றை நடை பயிற்சிக்கு அழைத்து செ ல்லலாம்.
அதில், நாய்கள் விளையாட புற்களால் அமைக்கப்பட்ட சுரங்க பாதை, சிறுகுளம், ஸ்பிரிங்ளர், அலங்கார வேலி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

