/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆபத்தான நிலையில் வன சோதனை சாவடி: சீரமைத்தால் பயன்
/
ஆபத்தான நிலையில் வன சோதனை சாவடி: சீரமைத்தால் பயன்
ஆபத்தான நிலையில் வன சோதனை சாவடி: சீரமைத்தால் பயன்
ஆபத்தான நிலையில் வன சோதனை சாவடி: சீரமைத்தால் பயன்
ADDED : டிச 22, 2025 06:00 AM

கூடலுார்: கூடலுார்-கோழிக்கோடு சாலை நந்தட்டி அருகே, பாதுகாப்பு இன்றி ஆபத்தான நிலையில் உள்ள வன சோதனை சாவடியை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.
கூடலுார்-கோழிக்கோடு சாலை நந்தட்டி அருகே, சளிவயல் சாலை பிரிந்து செல்கிறது. ஓவேலி சாலையுடன் இணையும் இச்சாலையை சளிவயல், தர்மகிரி மக்கள் போக்குவரத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழியாக வன குற்றங்களை தடுக்க, நந்தட்டி அருகே, வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைத்து, கண்காணித்து வருகின்றனர்.
சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பழமையான சிறிய சோதனைச் சாவடி கட்டடம், எந்த அடிப்படை வசதி யுமின்றி, சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. வன ஊழியர்கள், பல்வேறு சிரமங்களுடன், அதில் தங்கி பணியாற்றி வருகின்றனர். ஆபத்து ஏற்படும், பழமையான கட்டடத்தை அகற்றி விட்டு, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய, வன சோதனை சாவடி அமைத்து தர வலியுறுத்தி வருகின்றனர்.
வன ஊழியர்கள் கூறுகையில், 'வன அதிகாரிகள், சோதனை சாவடி கட்டடத்தை ஆய்வு செய்து, வன ஊழியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன், சோதனை சாவடி அமைத்து தர வேண்டும்,' என்றனர்.

