/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 29, 2026 05:45 AM
ஊட்டி: ஊட்டியில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட கிளை தலைவர் ஆஸ்ரா தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாகராஜன் தொடக்க உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், '70 வயது முடிந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும், 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி செயலாளர் ஆகிய ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்,7,850 ரூபாய் வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் முழுமையான சிகிச்சை தொகையை வழங்க வேண்டும்,' என்றனர்.
மாவட்ட பொருளாளர் பெரியய்யா பேசினார். மாவட்ட இணை செயலாளர் தமிழ்மணி, மாவட்ட துணை தலைவர் சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட கிளை துணை தலைவர் விஜயா நன்றி கூறினார்.

