லஞ்சத்துக்கு எதிரான குரல் தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
லஞ்சத்துக்கு எதிரான குரல் தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : அக் 27, 2026 06:17 PM
ADDED : அக் 27, 2026 06:14 PM

ஊட்டி: ஊட்டியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில், லஞ்ச ஒழிப்பு வாரத்தை ஒட்டி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி காந்தி சிலை அருகே நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்று லஞ்சத்திற்கு எதிரான, பல்வேறு தகவல்களை தெரிவித்து தெரு கூத்தாடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியில் லஞ்ச ஒழிப்பு துறையின் கட்டணமில்ல உதவி எண் , 1064 மற்றும் லஞ்ச ஒழிப்பு அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. , ஜாய் தயாள் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் செண்பக வடிவு உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பங்கேற்றனர்.
