/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கண் தானம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
கண் தானம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : செப் 12, 2025 08:05 PM
கூடலுார், ;கூடலுார் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மையத்தின் முதல்வர் ஷாஜி தலைமை வகித்தார். 'ஆல் தி சில்ட்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார்.
டாக்டர் ஜெயனப்பாத்திலா பேசுகையில், ''கண் தானம் செய்வதன் மூலம் கண் பார்வை இழப்பை தடுக்க முடியும். நாட்டில், 2.5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பார்வை இழந்துள்ளனர். இவர்களுக்கு உதவிட கண் தானம் அவசியம்.
ரத்தம் சம்பந்தமான நோய் தாக்கியவர்களை தவிர, மற்றவர்கள் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கண்தானம் வழங்க முடியும். உயிரிழப்புக்கு பின், 6 முதல் 8 மணி நேரத்திற்குள் கண் சேகரிக்கப்பட வேண்டும். எனவே, இது குறித்து தகவலை கண் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''விபத்துகளில் கண்ணில் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு உதவ கண் தானம் அவசியம். இதன் மூலம் அவர்கள் பார்வை பெற முடியும். ஒருவர் உயிருடன் இருக்கும் போது கண்தானம் செய்ய முடியாது.
கண் தானம் குறித்து மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.