/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேலாஸ் பஜார் பகுதியில் குப்பைகளை கிளறும் கரடிகள்
/
சேலாஸ் பஜார் பகுதியில் குப்பைகளை கிளறும் கரடிகள்
ADDED : ஏப் 21, 2025 08:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சேலாஸ் பஜார் பகுதிக்கு, அதிகளவில் கிராம மக்கள் வந்து, அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், வங்கி உட்பட பல்வேறு தேவைகளுக்கும் வந்து செல்கின்றனர்.
இங்கு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில், ஓட்டல் மற்றும் பேக்கரிகளால், உணவு பொருட்கள் கொட்டப்படுகிறது. சமீப காலமாக இப்பகுதிக்கு இரவில் வரும் கரடிகள் குப்பைகளை கிளறி உணவு தேடி கழிவுகளை உட்கொண்டு செல்கிறது.
தற்போது மூன்று கரடிகள் வந்து செல்கின்றன. வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.