ADDED : மார் 04, 2024 11:47 PM
பெ.நா.பாளையம்:துடியலுார் என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே மாற்று பாதையில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
துடியலுாரில் இருந்து இடிகரை செல்லும் வழியில் என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் இயங்குகிறது. இது தவிர, கோவை மேட்டுப்பாளையம் இடையே தினசரி ஐந்து முறை பாசஞ்சர் ரயில் இயங்கி வருகிறது. இங்கு, அடிக்கடி கேட் இறக்கப்படுவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இப்பிரச்னைக்கு, 50 கோடி ரூபாய் செலவில், புதிய ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பாலம் பணி நடைபெறும் வரை இடிகரை, வட்டமலை பாளையம், வையம்பாளையம், அத்திப்பாளையம், கோவில் பாளையம் வரை வசிப்பவர்கள் மாற்றுப்பாதையாக வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட் சாலையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது, மண் சாலையாக உள்ள வெள்ளக்கிணர் ஹவுஸிங் யூனிட் சாலையை, 31.70 லட்ச ரூபாய் செலவில் தார் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம் தலைமை வகித்தார். பணியை மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் துவக்கி வைத்தார்.

