/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பா.ஜ., கிளை தலைவர்கள் அறிமுக கூட்டம்
/
பா.ஜ., கிளை தலைவர்கள் அறிமுக கூட்டம்
ADDED : ஆக 15, 2025 08:36 PM
பந்தலுார்; பந்தலுாரில் பா.ஜ., கிளை தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மண்டல பொருளாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். நகர தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொது செயலாளர் தாயம்மா, துணை தலைவர்கள் அருண், திவாகரன், மாவட்ட செயலாளர் சிபி, கூடலுார் சட்டமன்ற சக்தி கேந்திர பொறுப்பாளர் தீபக்ராம், மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் அனுாப் உள்ளிட்டோர் பங்கேற்று, கட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினர்.
தொடர்ந்து கிளை தலைவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூட்டத்தில் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். மண்டல பொதுசெயலாளர் விக்னேஸ்வரி நன்றி கூறினார்.

