/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிவன் கோவிலில் புத்தக வெளியீட்டு விழா
/
சிவன் கோவிலில் புத்தக வெளியீட்டு விழா
ADDED : ஜூன் 21, 2025 06:20 AM
பந்தலுார : பந்தலுார் அருகே எருமாடு சிவன் கோவில் வளாகத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க., பாரத பண்பாட்டு கேந்திர வகுப்பின் சார்பில் அரும்பு புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தரன் தலைமை வகித்து, இறை பக்தி மற்றும் தேசப்பற்று குறித்து விளக்கி பேசியதுடன், இளைய தலைமுறையினர் தேசபக்தியுடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். சுவாமி ஓம்காரனந்தா ஆசி வழங்கினார். தொடர்ந்து, 21 சமுதாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில், பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட, 37 கிராமங்களில் இருந்து வருகை தந்த ஆசிரியர்கள் புத்தகங்களை பெற்று கொண்டனர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். நிர்வாகி சுரேஷ் நன்றி கூறினார்.