/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பி.எஸ்.என்.எல்., சேவையில் தொடர் பாதிப்பால் சிக்கல்
/
பி.எஸ்.என்.எல்., சேவையில் தொடர் பாதிப்பால் சிக்கல்
பி.எஸ்.என்.எல்., சேவையில் தொடர் பாதிப்பால் சிக்கல்
பி.எஸ்.என்.எல்., சேவையில் தொடர் பாதிப்பால் சிக்கல்
ADDED : ஜூன் 30, 2025 09:31 PM
குன்னுார்; குன்னுாரில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு காரணமாக சந்தாதாரர்கள் சிரமப்படுகின்றனர்.
குன்னுாரை தலைமையகமாக கொண்டு செயல்படும், பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனத்தில், தனியார் இணைப்புகளை விட பி.எஸ்.என்.எல்., மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.
மற்ற மாவட்டம் மற்றும் மாநிலங்களில், 4ஜி சேவை இருந்த போதும் நீலகிரியில், 3ஜி சேவை இருந்தது. கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு, 4ஜி சேவையாக மாற்றப்பட்டது. அதன்பின், மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., அழைப்பு வசதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 4ஜி சேவை வழங்கியபோதும், அவற்றின் இணைப்பு வேகம் குறைவாக உள்ளதால், இணைப்பு வசதிகளை முழுமையாக பலருக்கும் பயன்படுத்த முடிவதில்லை.
சேலாஸ், கொலக்கம்பை, அருவங்காடு, வெலிங்டன் உட்பட பெரும்பாலான இடங்களில் டவர், 4ஜி காண்பித்தாலும் ஸ்பீடு இல்லாமல் உள்ளது. 108 ஆம்புலன்ஸ், போலீசாரின் சி.யு.ஜி., எண்களுக்கும் இதே நிலை நீடிப்பதால் விபத்து உள்ளிட்ட தகவல்களை உடனடியாக முழுமையாக தெரிவிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து பல முறை புகார்கள் தெரிவித்தும், சிம்கார்டு ஒப்படைக்க பலரும் வந்த போதும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் மனோஜ் கூறுகையில்,''இது போன்ற பாதிப்புகள் தீர்வு காண குழு அமைத்து, எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு செய்து தீர்வு காணப்படும். இன்டர்நெட் சேவை தொடர்பாக தொழில்நுட்ப குழுவினரால் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.