/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் பட்டாம் பூச்சி பூங்கா: சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
/
முதுமலையில் பட்டாம் பூச்சி பூங்கா: சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
முதுமலையில் பட்டாம் பூச்சி பூங்கா: சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
முதுமலையில் பட்டாம் பூச்சி பூங்கா: சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : நவ 06, 2025 11:01 PM
கூடலூர்: கூடலூர், முதுமலையில் காணப்படும் பட்டாம்பூச்சிகளை சுற்றுலா பயணியர் ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கும் வகையில், பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர், முதுமலை பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் காணப்படுகிறது.
இவைகளை, சுற்றுலா பயணியர் ஒரே இடத்தில் பார்த்து செல்ல வசதியாக, நாடுகாணி பொன்னூர் தோட்டக்கலைப் பண்ணையில், பசுமைகுடிலுடன் கூடிய பட்டாம்பூச்சி பூங்கா அமைத்தனர். ஆனால், எதிர்பார்த்த பகுதியில் பட்டாம்பூச்சிகள் அங்கு வரவில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தற்போது, பட்டாம்பூச்சி பூங்கா அகற்றப்பட்டு, பூங்கா அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சாலையோரங்கள், காடுகள், தேயிலைத் தோட்டங்களில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வதை சுற்றுலா பயணியர் ரசித்து செல்கின்றனர். சீசன் காலங்களில், குறிப்பிட்ட சில வகை பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வதையும் ரசித்து செல்கின்றனர்.
இப்பகுதியில் காணப்படும் பட்டாம்பூச்சிகளை ஒரே இடத்தில் ரசித்து செல்லும் வகையில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'வனம் சார்ந்த கூடலூர், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பல வகையான பட்டாம்பூச்சிகள் ஆண்டு முழுவதும் பார்க்க முடிகிறது. இவைகளை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில், கூடலூர் மற்றும் முதுமலையில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாம்பூச்சிகள் பாதுகாக்கவும், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்,'' என்றனர்.

