ADDED : நவ 06, 2025 11:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: தேசிய நூலக வார விழா, நவ., 14ல் தொடங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது.
கோத்தகிரி வட்டார அளவில், பள்ளி மாணவர்களுக்கு, இரண்டு நாள் இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, வினாடி வினா மற்றும் நடனப் போட்டி நடத்தி, வெற்றி பெறும் மாணவர்களுக்கு தேசிய நூலக வார விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோத்தகிரி கிளை நூலகத்தில், வாசகர் வட்டம் சார்பில், நூலகர் அமுதா தலைமையில், இலக்கிய போட்டி நேற்று நடந்தது.
இதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து, திரளான மாணவர்கள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப் படுத்தினர்.

