/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரட் அறுவடை தீவிரம் மண்டிகளில் நேரடி விற்பனை
/
கேரட் அறுவடை தீவிரம் மண்டிகளில் நேரடி விற்பனை
ADDED : டிச 30, 2025 06:58 AM

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் தயாரான கேரட் அறுவடை செய்து, மண்டிகளில் நேரடி விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான, கூக்கல்தொரை, நெடுகுளா, ஈளாடா மற்றும் கட்டபெட்டு உட்பட, பல்வேறு பகுதிகளில் நடப்பு போகத்தில் அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு இருந்தாலும், கேரட் பயிருக்கு, அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில், பயிர் வாடாமல் இருக்க, விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர் .
தற்போது, படிப்படியாக கேரட் அறுவடைக்கு தயாராகி வருகிறது. வியாபாரிகள் குறைந்த விலை கேட்பதால், விவசாயிகளுக்கு கணிசமான இழப்பு ஏற்படுகிறது.
தற்போது, ஒரு கிலோ கேரட் ஊட்டி, குன்னுார் மற்றும் கோத்தகிரி உள்ளூர் மார்க்கெட்டில், 25 முதல், 35 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இந்த விலை கட்டுப்படியானதாக இல்லை என்பதால், விவசாயிகள் கூடுமானவரை, லாரிகளை வாடகைக்கு அமர்த்தி, அறுவடை செய்யும் கேரட்டை, மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டு சென்று நேரடியாக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

