/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'நான் பாதுகாப்பாக அரசு பஸ்சை இயக்குவேன்' அதிகாரிகள் முன் போக்குவரத்து ஊழியர்கள் உறுதி மொழி
/
'நான் பாதுகாப்பாக அரசு பஸ்சை இயக்குவேன்' அதிகாரிகள் முன் போக்குவரத்து ஊழியர்கள் உறுதி மொழி
'நான் பாதுகாப்பாக அரசு பஸ்சை இயக்குவேன்' அதிகாரிகள் முன் போக்குவரத்து ஊழியர்கள் உறுதி மொழி
'நான் பாதுகாப்பாக அரசு பஸ்சை இயக்குவேன்' அதிகாரிகள் முன் போக்குவரத்து ஊழியர்கள் உறுதி மொழி
ADDED : டிச 30, 2025 06:58 AM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பஸ் டிரைவர்கள் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
கடந்த வாரத்தில் கடலுார் பகுதியில் அரசு விரைவு பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து, கார்கள் மீது பஸ் மோதிய விபத்தில் , 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தின் எதிரொலியாக, மாநிலத்தின் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் உத்தரவுப்படி, ஊட்டி மண்டல பொது மேலாளர் ஜெய்சங்கர், துணை மேலாளர் ராமமூர்த்தி தலைமையில், உதவி மேலாளர் (வணிகம்) பாஸ்கர், ஊட்டி கிளை மேலாளர்கள் அருள் கண்ணன், மணிகண்டன், ஓட்டுனர் பயிற்றுனர்கள் சிவக்குமார், பாலாஜி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
அதில், டிரைவர்கள், கண்டக்டர்களை அழைத்து, 'மொபைல் பேசியப்படி வாகனம் இயக்க கூடாது, மொபைலில் ஹெட் செட், ப்ளூ டூத் உள்ளிட்டவற்றை இணைத்து, காதில் அவற்றை வைத்து பேசியபடி அல்லது பாடல்கள் கேட்ட படி வாகனம் இயக்க கூடாது. மேலும், பஸ்கள் இயக்கும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டால், உடனடியாக பஸ்சை நிறுத்தி கிளை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். துாக்கம் வந்தால் பஸ்களை இயக்க கூடாது,' என, அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஊட்டி, கூடலுார் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள், 'நான் பாதுகாப்பாக அரசு பஸ்சை இயக்குவேன்,' என, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
புகார்
தெரிவிக்கலாம்...
பஸ் ஓட்டும்போது டிரைவர்கள் மொபைல், புளூடூத், ஹெட் செட் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துவது கடு மை யாக தடை செ ய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களுக்கு, 94439 01453 (ஊட்டி), 9442501920 (கோவை), 94425 69210 ( திருப்பூர்), 9443901451 (ஈரோடு) ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

