/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடுரோட்டில் சண்டையிட்ட இரு சிறுத்தைகள்
/
நடுரோட்டில் சண்டையிட்ட இரு சிறுத்தைகள்
ADDED : டிச 30, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்: குன்னூர், கரி மொராஹட்டி கிராமத்தில் இரவில் நடுரோட்டில் சிறுத்தையும், கருஞ்சிறுத்தையும் சண்டையிட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னூர் கரி மொராஹட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த கருஞ்சிறுத்தையும், சிறுத்தையும் நடுரோட்டில் சண்டை யிட்டுள்ளன. அங்கு வாகனத்தின் முன்பு நீண்ட நேரம் சண்டையிட்டு தடுப்பு சுவற்றின் மீது ஏறி சென்றது. தற்போது திருவிழா காலம் என்பதால் இரவு நேரங்களில் மக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
பலரும் குழந்தைகளுடன் சென்று வருகின்றனர். இரு சிறுத்தைகள் நடமாடுவதால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

