/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மலை பாதையில் துாய்மை பணி பிளாஸ்டிக் உட்பட குப்பை சேகரிப்பு
/
குன்னுார் மலை பாதையில் துாய்மை பணி பிளாஸ்டிக் உட்பட குப்பை சேகரிப்பு
குன்னுார் மலை பாதையில் துாய்மை பணி பிளாஸ்டிக் உட்பட குப்பை சேகரிப்பு
குன்னுார் மலை பாதையில் துாய்மை பணி பிளாஸ்டிக் உட்பட குப்பை சேகரிப்பு
ADDED : அக் 02, 2025 08:50 PM

குன்னுார்:குன்னுார் மலைப்பாதை உட்பட சுற்றுப்புற பகுதிகளில் துாய்மை பாரத நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் உட்பட, 1.5 டன் குப்பை சேகரித்து அகற்றப்பட்டது.
குன்னுார் பாஸ்டியர் நிறுவனத்தில், மத்திய அரசின் துாய்மை பாரத விழிப்புணர்வு நிகழ்ச்சி, கடந்த, 17ம் தேதியிலிருந்து நேற்று வரை நடந்தது. பாஸ்டியர் ஆய்வக நிறுவனம், 'பேங்க் ஆப் பரோடா' ஆகியவை இணைந்து மாபெரும் தூய்மை சிறப்பு முகாமை நடத்தின.
அதில், குன்னுார் சிம்ஸ் பூங்கா, ரயில்வே ஸ்டேஷன் வெலிங்டன் ரயில்வே ஸ்டேஷன், காட்டேரி சோதனைச் சாவடி முதல் கல்லார் வரை என நான்கு பிரிவுகளில், தலா, 20 நபர்கள் வீதம், 16 குழுவினர் துாய்மை பணிகளை மேற்கொண்டனர்.
அதில், பிளாஸ்டிக், மது பாட்டில்கள் உட்பட, 1.5 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு, ஓட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை மையத்திற்கு மறுசுழற்சிக்காக அனுப்பப்பட்டது..
முகாமுக்கு சிறப்பு விருந்தினராக, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் சிவசாமி, முதன்மை விஞ்ஞானி நல்லதம்பி ஆகியோர் பங்கேற்றனர்.
பேங்க் ஆப் பரோடா முதன்மை மேலாளர் நரேந்திர பாபு, மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் குமார், 'கிளீன் குன்னுார்' அமைப்பு தலைவர் சமந்தா அயனா, செயலாளர் வசந்தன், டிஎஸ்பி ரவி, உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பாஸ்டியர் ஆய்வக இயக்குனர் டாக்டர் சிவகுமார், உதவி இயக்குனர் பிரேம்குமார், நிர்வாக அலுவலர் வைர மூர்த்தி, தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் செய்திருந்தனர்.