/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடுக்குமாடி கட்டடங்களை கண்டு கொள்வதில்லை மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
அடுக்குமாடி கட்டடங்களை கண்டு கொள்வதில்லை மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
அடுக்குமாடி கட்டடங்களை கண்டு கொள்வதில்லை மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
அடுக்குமாடி கட்டடங்களை கண்டு கொள்வதில்லை மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : அக் 02, 2025 08:42 PM
குன்னுார்:குன்னுார் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சுசீலா தலைமையில் நடந்தது. கமிஷனர் இளம்பரிதி முன்னிலை வகித்தார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலில் பெண் கவுன்சிலர்கள் பேச தலைவர் அழைப்பு விடுத்தார்.
உமா: துாய்மை பணியாளர்கள் வேலை மாற்றபட்டுள்ளது. முருகன் கோவில் மண்பாதை செடிகளை அகற்றவில்லை. சுகாதார பாதிப்பால், சிறுவர்களுக்கு கொசு கடித்து கண் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கல்வெட்டுகளும் சுத்தம் செய்வதில்லை. நகராட்சி தீர்மானங்கள் வாசிக்காமல் 'ஆல் பாஸ்' சொல்கிறீர்கள். இதனை ஏற்றுகொள்ள முடியாது.
காவேரி: நான்கு ஆண்டுகளாக கேட்கும் பணிகள் எதுவும் வரவில்லை. மழை வந்தால் வீட்டிற்குள் தண்ணீர் போகிறது.
கவுன்சிலர்கள் காவேரி, வசந்தி, உமா: அடுக்கடுக்கான பெரிய கட்டடங்களின் பணிகள் நடந்து வருகிறது. விதிகளை மீறி புதிதாக கட்டடங்கள் கட்டுகின்றனர். ஆனால், சாதாரண மக்கள் சிறிய தகரம் அடித்து பணிகள் மேற்கொண்டாலும், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில், எந்த தகவல் கூறாமல் வந்து நகராட்சி ஊழியர்கள் 'சீல்' வைக் கின்றனர்.
மணி, ஜாகிர், மன்சூர்: துாய்மை பணியாளர்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை. கையுறை வழங்குவதில்லை. அவர்களின் பணிக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும்.
சரவணகுமார்: தற்போது பல சாலைகள பணி தரமில்லை என புகார் அளித்தும் தரமாக பணிகள் மேற்கொள்வதில்லை. தரமில்லாத பணி மேற்கொள்பவர் களுக்கு பணி வழங்கப்படுகிறது. தரமில்லாத ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் சரி செய்ய கூறியும் இதுவரை செய்யவில்லை.
ராஜேந்திரன் : ஒட்டுப்பட்டறையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தும் தீர்வு இல்லை.
கமிஷனர் இளம்பரிதி கூறுகையில்,''கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.