/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
/
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
ADDED : அக் 02, 2025 08:41 PM
கோத்தகிரி:கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில், காங்., சார்பில், காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
காங்., வட்டாரத் தலைவர் சில்லபாபு தலைமையில்,காந்தியடிகள் படத்திற்கு மாலை அணிவித்து, பூஜை செய்து மரியாதை செலுத்தப்பட்டது. 'வன்முறைக்கு எதிராகவும், அமைதி பேணி காக்கப்பட வேண்டும்,' என, உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனை அடுத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அதே பகுதியில், முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. காமராஜரின் எளிய வாழ்க்கை வரலாறு, அவர் முதல்வராக இருந்த காலத்தில், பள்ளிகளை தொடங்கி மாணவர்களின் கல்வி அறிவை வளர்த்தது, அணைகள் கட்டியது குறித்து நினைவு கூறப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள், வேலுசாமி, காரி, காமராஜ் மற்றும்போஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பந்தலுார்: பந்தலுார் அருகே மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில், பத்தாம் நம்பர் பழங்குடியின கிராமத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மைய தலைவர் நவ்ஷாத் தலைமை வகித்தார். கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம், சமூக ஆர்வலர் இந்திரஜித், சேவை மைய துணை தலைவர் கபீர் முன்னிலை வகித்தனர். பழங்குடியின கிராமத்தில் பழங்குடியின மக்களுடன் இணைந்து, காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.