/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்கு செல்வதில் குழப்பம்!'ஊட்டிக்கு ஐந்து நாட்கள் வராதீங்க' வீடியோ வைரல்
/
சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்கு செல்வதில் குழப்பம்!'ஊட்டிக்கு ஐந்து நாட்கள் வராதீங்க' வீடியோ வைரல்
சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்கு செல்வதில் குழப்பம்!'ஊட்டிக்கு ஐந்து நாட்கள் வராதீங்க' வீடியோ வைரல்
சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்கு செல்வதில் குழப்பம்!'ஊட்டிக்கு ஐந்து நாட்கள் வராதீங்க' வீடியோ வைரல்
ADDED : அக் 02, 2025 08:52 PM

ஊட்டி;தொடர் விடுமுறை காரணமாக, நீலகிரியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதால், விடுதிகளுக்கு முன்பதிவு செய்து வரும் வாகனங்களையும் காலை நேரத்தில், தலைகுந்தா அருகே நிறுத்துவதால், ஓட்டல்களுக்கு செல்ல முடியாமல் பயணிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
தசரா மற்றும் தேர்வு விடுமுறை காரணமாக, ஊட்டிக்கு கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், அதிகரித்து வரும் வாகனங்களால், முதுமலை, கூடலுார், ஊட்டி பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்கும் வகையில், 5ம் தேதி வரை, மாவட்டம் முழுவதும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சுற்றுலா பயணிகள் குன்னுார், ஊட்டிக்கு வந்து பயணத்தை முடித்து செல்லும்போது, கோத்தகிரி வழியாக ஒரு வழி பாதையில் செல்ல வேண்டும்.
குன்னுார் வழியாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பஸ்கள் மற்றும் மினி பஸ்கள், ஆவின் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு, சிறப்பு பஸ்கள் வாயிலாக சுற்றிப் பார்த்துவிட்டு செல்ல வேண்டும்.
கூடலுார் வழியாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பஸ்கள் மற்றும் மினிபஸ்கள், எச்.பி.எப்., பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து சிறப்பு பஸ்கள் வாயிலாக பயணிகள் சுற்றுலா தலங்களை பார்வையிட்டு செல்லலாம்.
கனரக வாகனங்களுக்கு தடை கனரக வாகனங்களுக்கு காலை, 8:00 மணி முதல் மாலை, 2:00 மணி வரை, ஊட்டி நகரம், குன்னுார் மற்றும் கூடலுார் நகருக்குள் எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை. இந்த போக்குவரத்து மாற்றமானது, 5ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்நிலையில், திடீர் போக்குவரத்து மாற்றத்தால், கேர ளா, கர்னாடகாவில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில், ஓட்டல்ககள், விடுதிகளில் முன்பதிவு செய்து வருபவர்கள், அதிகாலையில் ஊட்டி அருகே எச்.பி.எப்., பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
இதனால், நகரில் காட்டேஜ், விடுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும், சுற்றுலா பயணிகள் தனியார் வாகனங்களை நாட வேண்டி உள்ளதால், பயணிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால், நேற்று சில சுற்றுலா பயணிகள் தலைகுந்தா பகுதியுன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்க, சீசன் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் தேவைக்கு ஏற்ப, கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டி ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் கூறுகையில்,''தசரா, ஆயுதபூஜை காரணமாக கர்நாடகா, கேரளா சுற்றுலா வாகனங்கள் அதிகரித்து வருகி ன்றன. நகரில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, புறநகர் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. விடுதியில் முன்பதிவு செய்து வருபவர்கள் நகருக்குள் விடுமாறு கேட்கின்றனர். அப்படி விட்டால் நெரிசல் ஏற்படும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை நாங்கள் பின்பற்றி வருகி றோம்,'' என்றார்.