/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பணி செய்ய கண்டனம்
/
அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பணி செய்ய கண்டனம்
அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பணி செய்ய கண்டனம்
அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பணி செய்ய கண்டனம்
ADDED : அக் 07, 2025 08:59 PM
குன்னுார்; குன்னுாரில், இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் 'மல்டி லெவல் பார்க்கிங்' கட்டும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னுார் விநாயகர் கோவில் அருகே இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடமான, பழைய கணேஷ் தியேட்டர் வளாகத்தில், புதிய மல்டி லெவல் பார்க்கிங் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்து முன்னணி நீலகிரி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள், கூடுதல் கலெக்டருக்கு புகார் மனு கொடுத்தனர்.
அதில், 'கோவில் நிலம் கோவிலுக்கு சொந்தம் என்றும், பக்தர்களுக்கு வசதிக்காக மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் வருமானத்திற்காக இங்கு மல்டி லெவல் பார்க்கிங் கொண்டு வருவதை இந்து முன்னணி கண்டிக்கிறது. பொதுமக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,' என்றனர்.