/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
/
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
ADDED : அக் 07, 2025 08:59 PM
ஊட்டி; நீலகிரியில் வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், 12 மின் நிலையம், 13 அணைகள் உள்ளன. இவற்றில், தினசரி, 833. 65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், 80 சதவீதம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
நடப்பாண்டு பருவ மழை அதிகளவில் பெய்ததால் இங்கு உள்ள அணைகளில், 90 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது.
மாவட்டத்தில் உள்ள மின் நிலையம் , அணைகள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே சரியான பகுதிகளில் உள்ளன. பெரும்பாலான மின் நிலையங்கள், 60 ஆண்டுகளை கடந்த பழமையானவை.
இந்நிலையில், விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் மின் நிலையங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம், 'பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ள வேண்டும்,' என, உத்தரவிட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மின்வாரிய தலைமை உத்தரவுப்படி வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகள் வாயிலாக மின் நிலையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
அதை கருத்தில் கொண்டு மின் நிலையங்களில் உள்ள மின்சாதன கருவிகள், அணைகளில் இருந்து மின் நிலையங்களுக்கு செல்லும் ராட்சதக் குழாய் பராமரிப்பு பணி, அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே உள்ள அபாயகரமான மரங்களை அகற்றுதல், சாலைப் பணி, தண்ணீர் செல்லும் வடிகால், ராட்சத மின் கோபுரங்களில் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.