தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/போட்டி தேர்வர்களுக்கு வாழ்த்து

போட்டி தேர்வர்களுக்கு வாழ்த்து

போட்டி தேர்வர்களுக்கு வாழ்த்து


ADDED : நவ 01, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலூர்: போட்டித் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு வாழ்த்து கூறி, அனுப்பி வைத்த நூலகத்துறைக்கு வாசகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பந்தலூர் நூலகத்தில், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள், தினசரி வந்து படித்து வருகின்றனர்.

இன்று (நவ.,1) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2-க்கான தேர்வு இன்று நடந்தது.

இதில் நூலகத்தில் படித்த, 15 பேர் தேர்வு எழுத சென்றனர்.

இவர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி நூலகத்தில் நடந்தது. நூலவர் அறிவழகன் வரவேற்றார்.

மாவட்ட நூலக அலுவலர் கிளமெளண்ட் தலைமை வகித்து, மாணவர்கள் படித்ததை நினைவில் கொண்டு, அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க வேண்டும். முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடை அளித்த பின்னர், பிற வினாக்களுக்கு பொறுமையாக விடை அளிக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் பேனா வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை அமைப்பாளர் நவ்ஷாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நூலகர் நித்யகல்யாணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us