/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் துவக்கம்
/
ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் துவக்கம்
ADDED : மார் 28, 2025 03:34 AM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ், நீலகிரி மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் சேவை சங்கம் துவக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இச்சங்கம், ஊட்டி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் மூலம், பதிவு செய்யப்பட்டு செயல்பட துவங்கி உள்ளது. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகத்தில் செயல்படும் இச்சங்கம், மத்திய மற்றும் மாநில அரசு துறைகள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எழுத்தர் அலுவலக உதவியாளர், பாதுகாவலர், துாய்மை பணியாளர், டிரைவர் விற்பனையாளர், கட்டுனர், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர், ஆசிரியர் மற்றும் நகை மதிப்பீட்டாளார் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் உறுப்பினர்களாக சங்கத்தில் சேரலாம்.
மேலும், சங்கத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கு ஆர்வம் உடையவர்கள் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு, செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.