UPDATED : நவ 10, 2026 09:35 AM
ADDED : நவ 10, 2026 09:32 AM

அ நிறம் | அளவு
பாலக்காடு: கேரள மாநிலம், ஆற்றிங்கல் போலீஸ் ஸ்டேஷனில் பதிவான கொலை முயற்சி வழக்கின் குற்றவாளியான, அப்பகுதியை சேர்ந்த பிஜு, 52, தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரயில்வே போலீஸ் எஸ்.பி., கிருஷ்ணகுமாருக்கு கிடைத்த தகவலின் படி, எஸ்.ஐ., பிரவீண் தலைமையிலான தனிப்படையினர், எர்ணாகுளம் – -பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, ரயிலில் பதுங்கியிருந்த பிஜுவை மடக்கி பிடித்து, ஆற்றிங்கல் போலீசாரிடம் ஒப்படைக் கப்பட்டார்.
