UPDATED : நவ 10, 2026 09:35 AM
ADDED : நவ 10, 2026 09:32 AM

அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அடுத்த சேந்தங்காடு பகுதியை சேர்ந்த சிவன் – - அனிதா தம்பதியரின் மகன் ஆகாஷ், 21. எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில் கோட்டாயி பகுதியில் இருந்து, குழல்மன்னம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். மாத்துார் அக்ரஹாரம் அருகே சென்றபோது, எதிரே வந்த காஸ் சிலிண்டர் லாரி, பைக் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ஆகாஷை மீட்டு, ஆலத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்த நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு இறந்தார். கோட்டாயி போலீசார் விசாரிக்கின்றனர்.
