/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை சேதம் தடுக்கி விழும் சுற்றுலா பயணிகள்

ADDED : நவ 18, 2025 02:39 AM

கோத்தகிரி: கோத்தகிரி கேத்ரின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை, சேதம் அடைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் தடுக்கி விழும் நிலை உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில், கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி, முக்கியத்துவம் பெறுகிறது. மாவட்டத்தில், சீசன் நாட்கள் உட்பட, சாதாரண நாட்களிலும் கூட, கணிசமான எண்ணிகையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதியில், பாதுகாப்பு கம்பி வேலி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உள்ளன. எனினும், பிரதான சாலையில் இருந்து, கோபுரம் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் நடைப்பாதை படிக்கட்டுகள் சீரமைக்கப்படாமல், சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் தடுக்கிவிடும் நிலை உள்ளது. எனவே, வனத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடைபாதை படிக்கட்டுகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.