/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டுரிமை இல்லாத பழங்குடியின மக்கள்: பல முறை விண்ணப்பித்தும் கண்டுகொள்ள யாருமில்லை

ADDED : நவ 18, 2025 02:40 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே கிளன்ராக் பழங்குடியின கிராமத்தில், பல முறை விண்ணப்பித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் உள்ளதால், பழங்குடியின தம்பதிகள் கவலை அடைந்துள்ளனர்.
பந்தலுார் இருந்து, 12 கி.மீ., தொலைவில், வனப்பகுதிக்கு மத்தியில் கிளன்ராக் பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மக்கள், வெளியிடங்களுக்கு செல்வது இயலாத காரியமாக மாறி உள்ளது.
இந்நிலையில், இங்கு குடியிருக்கும் மணிகண்டன், 27, சிந்து,23, தம்பதியின் பெயர், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளது. ஐந்து முறை இவர்கள் விண்ணப்பித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், தேர்தல் நேரத்தில் ஓட்டு போட முடியாமல் ஏமாற்றம் அடைவதாக இவர்கள் ஆதங்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த, 15-ம் தேதி கிராமத்திற்கு சென்ற, தேர்தல் அலுவலர்களிடம், இவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டிலியல் பெயர் சேர்க்க வலியுறுத்தினர்.
அப்போது, அவர்களிடம் விண்ணப்பம் பெற்று, பெயர் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மணிகண்டன் கூறுகையில்,''இந்த முறையாவது எங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, வரும் தேர்தலில் ஓட்டு போ வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம். அதேபோல, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத பிற பழங்குடிகளையும் இணைக்க வேண்டும்,'' என்றார்.