/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விநாயகர் விசர்ஜன விழா 501 இடங்களில் சிலைகள்
/
விநாயகர் விசர்ஜன விழா 501 இடங்களில் சிலைகள்
ADDED : ஆக 11, 2011 10:57 PM
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் வரும் 31ம் தேதியில் இருந்து செப்.
4ம் தேதி வரை விநாயகர் விசர்ஜன விழா நடத்த 501 இடங்களில் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி கோவை - நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி மாவட்டத்தில் வரும் 31ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 4ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் 501 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழாவில் வலியுறுத்தப்படுகிறது. செப். 4ம் தேதி நடக்கும் விசர்ஜன விழாவில் மாநில, மாவட்ட, ஆன்மிக பெரியவர்கள், சமுதாய தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். நீலகிரி மாவட்ட படுகர் குல கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் மதமாற்றத்தை தடுக்கும் விதமாக மதமாற்ற தடுப்புக்குழு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, செல்வகுமார் கூறியுள்ளார்.