sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னூரில் பலியான ஈரான் வாலிபர் சொந்த நாட்டுக்கு உடல் அனுப்ப ஏற்பாடு

/

குன்னூரில் பலியான ஈரான் வாலிபர் சொந்த நாட்டுக்கு உடல் அனுப்ப ஏற்பாடு

குன்னூரில் பலியான ஈரான் வாலிபர் சொந்த நாட்டுக்கு உடல் அனுப்ப ஏற்பாடு

குன்னூரில் பலியான ஈரான் வாலிபர் சொந்த நாட்டுக்கு உடல் அனுப்ப ஏற்பாடு


ADDED : செப் 08, 2011 01:29 AM

Google News

ADDED : செப் 08, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர் : குன்னூர் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலியான ஈரான் இளைஞரின், உடலை அவரது உறவினர்கள் ஈரான் கொண்டு சென்றனர்.

ஈரான் டெகரான் பகுதியை சேர்ந்தவர் அலிரேஜா நஜ்மி(20); இவர் பெங்களூருவில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் இணைந்து டாக்டருக்கு படிக்க விண்ணப்பித்து, அட்மிஷன் பெற்றுள்ளார். ஊட்டியை சுற்றி பார்க்கும் ஆவலில், அவரது அண்ணன் அமித்ரேஜா மற்றும் இரு நண்பர்களுடன் கடந்த இரு நாளுக்கு முன் ஊட்டி வந்து, தனியார் லாட்ஜில் தங்கினர். நேற்று முன்தினம் குன்னூரில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களை பார்க்கும் ஆவலில் வந்த அவர்கள், குன்னூர் டால்பின்ஸ் நோஸ் முனைக்கு செல்லும் வழியில் உள்ள கரன்சி நீர் வீழ்ச்சியை கண்டு ரசித்துள்ளனர்; நீர் வீழ்ச்சியின் இடையே உள்ள பாறை மீது நின்று, அலிரேஜா, புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

எதிர்பாராவிதமாக பாறையில் இருந்து தவறி விழுந்த அவர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேல் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது உடல் நேற்று காலை குன்னூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தூதரக ஏஜென்ட் மோகன் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் அலிரேஜாவின் உடல் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டது.








      Dinamalar
      Follow us