sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊழலற்ற நிர்வாகமே பா.ஜ.,வின் குறிக்கோள்

/

ஊழலற்ற நிர்வாகமே பா.ஜ.,வின் குறிக்கோள்

ஊழலற்ற நிர்வாகமே பா.ஜ.,வின் குறிக்கோள்

ஊழலற்ற நிர்வாகமே பா.ஜ.,வின் குறிக்கோள்


ADDED : அக் 12, 2011 02:59 AM

Google News

ADDED : அக் 12, 2011 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : 'ஊழலற்ற நிர்வாகத்தை மட்டுமே பா.ஜ., விரும்புகிறது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் பா.ஜ.,கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்­ளது. பா.ஜ., தேசிய சிறுபான்மை பிரிவு பொது செயலாளரும், பா.ஜ., மாநில துணை தலைவருமான முனவரிபேகம் கோத்தகிரியில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசியதாவது:பா.ஜ., மதவாத கட்சியல்ல, மாறாக அக்கட்சியில் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் இணைந்துள்ளனர். எங்கள் ஆட்சியில் தான் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தார்; ஜார்ஜ் பெர்னான்டஸ் ராணுவ அமைச்சராக இருந்தார். பா.ஜ., வை பொறுத்தமட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை மட்டுமே விரும்புகிறது. இதனால், எங்கள் கட்சி வேட்பாளரை தலைவராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர் கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து மக்கள் பயன் பெறும் வகையில் சிறந்த நிர்வாகத்தை தர கட்சி உறுதியளிக்கிறது. மேலும், குடிநீர், மழைநீர் வடிகால், நடைபாதை, சாலை வசதி, சுகாதாரத்துடன் பொது கழிப்பிடம், சமுதாய கூடம் போன்ற மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்த செய்யப்படும்.முக்கியமாக இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் கோத்தகிரி தற்போது வாகன நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதை தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரப்படும். மேலும், பேரூராட்சிக்கு கணிசமான வருவாய் ஈட்டும் வகையில், வணிக வளாகங்கள் கட்டப்படும். எனவே, பா.ஜ., வேட்பாளர் நஞ்சுண்டனுக்கு வெற்றி பெற தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு முனவரிபேகம் பேசினார்.பா.ஜ., மாவட்டதலைவர் குமரன், கோட்ட பொறுப்பாளர் ராமன், மாநில எஸ்.சி., அணி தலைவர் அன்பு, தொகுதி பொறுப்பாளர் அம்பிகை கணேசன், மாவட்ட துணை தலைவர் கவுரி, செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us