sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புதிய பஸ்சை இயக்கினால் மகிழ்ச்சி

/

புதிய பஸ்சை இயக்கினால் மகிழ்ச்சி

புதிய பஸ்சை இயக்கினால் மகிழ்ச்சி

புதிய பஸ்சை இயக்கினால் மகிழ்ச்சி


ADDED : அக் 12, 2011 03:01 AM

Google News

ADDED : அக் 12, 2011 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சூர் : மஞ்சூர்-கோவை வழித்­தடத்தில் புதிய பஸ்சை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கிளைக்கு சொந்தமான பஸ் ஒன்று கோவையிலிருந்து மஞ்சூர் அருகே கீழ்குந்தா கிராமத்திற்கு நாள்தோறும் காலை மற்றும் மாலையும் இயக்கப்படுகிறது. மஞ்சூரி லி­ருந்து கெத்­தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு செல்கிறது.கடந்த சில மாதங்களாக இந்த பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. இதனால், பயணிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாததால் கடுமையாக பாதிக்­கப்பட்டு வந்தனர். போக்குவரத்து துறையினருக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நட­வடிக்கையும் எடுக்கவில்லை. யானை உள்ளிட்ட வன விலங்குகளின் தொல்லை உள்ள நிலையில் அடிக்கடி அடர்ந்த வனப்பகுதி சாலையில் பழுதாக நிற்பது வாடிக்கையாகிவிட்டது. வயதானவர்கள், கைக்குழந்தையுடன் செல்லும் பயணிகள் வன விலங்­குகளின் நடமாட்டத்திற்கு மத்தியில் காத்திருக்க வேண்டிய அவல நிலை க்கு தள்ளப்ப­ டுகின்றனர். கடந்த வாரத்தில் கூட காலை நேரத்தில் மஞ்சூர் வந்தடைந்த இந்த பஸ் திடீரென பின்னோக்கி நிகர்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதையடுத்து, பஸ்சில் வந்த பயணி ஒருவர் பாய்ந்து வந்து பிரேக் மிதித்து நிறுத்தயதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே, போக்குவரத்து துறையினர் கோவை-கீழ்குந்தா பஸ்சை மாற்றி பயணிகளின் வசதிக்காக புதிய பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us