/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண் சரிவை அகற்றிய பேரிடர் மீட்பு குழுவினர்
/
மண் சரிவை அகற்றிய பேரிடர் மீட்பு குழுவினர்
ADDED : அக் 21, 2025 07:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்: குன்னூர் இந்திரா நகர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அகற்றினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்து வரும் கன மழையில், இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. ஏற்கனவே நடைபாதை சீரமைப்புக்கு பூமி பூஜை போடப்பட்டது.
இந்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மழை தீவிரமாகும் நிலையில், இங்கு மண்சரிவு ஏற்பட்டு மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகனங்களை மூடும் அபாயம் உள்ளது.இப்பகுதிகளில் மண்சரிவை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அகற்றினர்.