ADDED : ஜூலை 21, 2026 02:10 AM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி காந்தி மைதானத்தில், 'அக்காடு குரூப்' சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் 'லீக்' போட்டி நடந்து வருகிறது. முதல் போட்டி, ஊட்டி கோல்ட்ஸ் அணிக்கும், எச்.பி.எப்., அணிக்கும் இடையே நடந்தது. கோல்ட்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்து, 35 ஓவர்களில், 7 விக்கெட்களை இழந்து, 299 ரன்கள் குவித்தது. இந்த அணி வீரர் அசோக்குமார், 101 ரன்கள் எடுத்தார். எச்.பி.எப்., அணி பவுலர் ஆனந்தகுமார், 3 விக்கெட்களை சாய்த்தார்.
தொடர்ந்து, 300 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய, எச்.பி.எப்., அணி, 20.4 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.165 ரன்கள் வித்தியாசத்தில், கோல்ட்ஸ் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.
