UPDATED : நவ 05, 2026 11:47 PM
ADDED : நவ 04, 2026 05:43 PM

பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில், 2026-ம் ஆண்டிற்கான சிறந்த ஆட்சிமொழி விருதுக்கு, மாவட்ட கல்வி துணை இயக்குநர் அலுவலகத்தின் நகல் பிரிவு கண்காணிப்பாளர் மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அரசு நிர்வாகப் பணிகளை முழுமையாக மலையாள மொழியில் செயல்படுத்துவது மற்றும் ஆட்சிப்பணியில் தாய்மொழியை ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.
மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மூன்றாம் நிலை ஊழியர்கள் இதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றனர். மாவட்ட கலெக்டர் சுதிர் தலைமையில், கூடுதல் மாவட்ட நீதிபதி, மலையாள மொழி ஒருங்கிணைப்பு அதிகாரி, மாவட்ட ஆட்சிமொழி குழு உறுப்பினர்கள் மற்றும் மொழி அறிஞர் ஆகியோர் அடங்கிய தேர்வு குழுவினர், மணிகண்டனை இவ்விருதுக்கு ஒருமனதாகத் தேர்வு செய்தனர்.
