/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.40 விலை நிர்ணயம்; மாவட்ட படுகர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
/
பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.40 விலை நிர்ணயம்; மாவட்ட படுகர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.40 விலை நிர்ணயம்; மாவட்ட படுகர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.40 விலை நிர்ணயம்; மாவட்ட படுகர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
UPDATED : செப் 28, 2025 11:15 PM
ADDED : செப் 28, 2025 10:08 PM
குன்னுார், ; 'பசுந்தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு, ரூ.40 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்தை நம்பி, 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு, பலரும் பசுந்தேயிலை வினியோகம் செய்து வருகின்றனர்.
மாநில அரசின் 'இன்கோசர்வ்' கட்டுப்பாட்டில் உள்ள இந்த தொழிற்சாலைகளுக்கு, கூட்டுறவு தேயிலை சிறு விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டிய பொறுப்பு உள் ளது.
ஆனால், ஒரு கிலோ பசுந்தேயிலைக்கான உற்பத்தி செலவு, 25 ரூபாய்க்கு மேல் ஆகும் நிலையில், 14 ரூபாய்க்கு கீழாக விலை வழங்கப்படுவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
படுகர் சங்க கூட்டமைப்பு பொது செயலாளர் சுப்ரமணியம் கூறியதாவது:
தேயிலை விவசாயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மாநில அரசு தனது பங்கும் காண பொறுப்பை நிறைவேற்றும் நிலையில் உள்ளது. 'இன்கோசர்வ்' மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, சில அதிகாரிகளின் நிர்வாக அக்கறையின்மையால், வீண் செலவு மற்றும் திறமையின்மை காரணமாக உரிய விலையை வழங்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த தேர்தலுக்கு முன்பு கூட்டுறவு சிறு தேயிலை விவசாயிகளுக்கு, 2 ரூபாய் மானியம் மாநில அரசு வழங்கியது வரவேற்கதக்கது. எனினும், தற்காலிக மானியம் இதற்கு தீர்வல்ல என்பது சிறு விவசாயிகளின் நிலையாகும். எனவே சிறு தேயிலை விவசாயிகள் சாகுபடி செய்யும் பசுந்தேயிலை கிலோவிற்கு, 40 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாநில முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.