தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பள்ளி வளாகத்தில் வளர்ப்பு நாய்கள் வேட்டை: சிறுத்தையால் மாணவர்கள் அச்சம்

பள்ளி வளாகத்தில் வளர்ப்பு நாய்கள் வேட்டை: சிறுத்தையால் மாணவர்கள் அச்சம்

பள்ளி வளாகத்தில் வளர்ப்பு நாய்கள் வேட்டை: சிறுத்தையால் மாணவர்கள் அச்சம்


UPDATED : அக் 20, 2026 06:40 PM

ADDED : அக் 20, 2026 06:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 06:40 PM ADDED : அக் 20, 2026 06:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி:

கோத்தகிரி தனியார் பள்ளி வளாகத்தில், மூன்று வளர்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடிய சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக, வனவிலங்குகளில் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், தேயிலை தோட்டங்களில் பதுங்கி, அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், கோத்தகிரி - கட்டபெட்டு இடையே, வெஸ்ட் புரூக் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் மாலை, தடுப்பு சுவரை தாண்டி புகுந்த சிறுத்தை, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வளர்ப்பு நாய்களை வேட்டையாடியது.

அதில், ஒரு பெரிய நாயை, கவ்வி செல்ல முடியாமல் இழுத்து சென்ற காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் உட்பட, சுற்றுவட்டார குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ‘சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,’ என, பள்ளி நிர்வாகம் சார்பில் கட்டபெட்டு வனச்சரகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us