ADDED : டிச 11, 2024 09:27 PM
கூடலுார்; கூடலுார் பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டத்தில், வளர்ப்பு எருமை உயிரிழந்த சம்பவத்தால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை கோட்டம்(டான்டீ) சரகம்-1 தேயிலை தோட்டத்தில், காயங்களுடன் வளர்ப்பு எருமை இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நாடுகாணி வனத்துறையினர் உடலை ஆய்வு செய்தனர். ஆய்வில் மாமிச உண்ணி தாக்கி, ஆண் வளர்ப்பு எருமை இறந்தது தெரிய வந்தது.
அதன் உடலை கொளப்பள்ளி அரசு கால்நடை டாக்டர் சோனியா பிரேத பரிசோதனை செய்தார்.
இச்சம்பவத்தால் அச்சமடைந்துள்ள தொழிலாளர்கள் கூறுகையில், 'அப்பகுதியில் புலி தாக்கி வளர்ப்பு எருமை உயிரிழந்துள்ளது. இவை மனிதர்கள் தாக்கும்ஆபத்தும் உள்ளது. வனத்துறை அப்பகுதியில், உள்ளகால் தடத்தை ஆய்வு செய்வதுடன், தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

