ADDED : நவ 01, 2026 05:30 PM

அ நிறம் | அளவு
பாலக்காடு:
பாலக்காடு மாவட்டம், கோவை- – கொச்சி தேசிய நெடுஞ்சாலை பாம்பம்பள்ளம் சுங்கச்சாவடி அருகே, இன்று (நவ.,1) காலை, 5:00 மணி அளவில், இன்ஸ்பெக்டர் நவுபல் தலைமையிலான பாலக்காடு எக்சைஸ் அமலாக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினர் தீவிர வாகனச்சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது, கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தி பயணிகளிடம் சோதனையிட்டனர்.
அச்சோதனையில், மலப்புரம் மாவட்டம் ஏறநாடு காரக்குன்னு பகுதியைச் சேர்ந்த அனந்து பாஸ்கர் 31, என்பவரின் பையில் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 420.692 கிராம் ஹாஷிஷ் ஆயில் மற்றும் 0.527 கிராம் ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பதைக்கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அவரை கைது செய்தனர்.
