தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/‘பாலக்காடு மாரத்தான்’ டிச.6ம் தேதி நடக்கிறது

‘பாலக்காடு மாரத்தான்’ டிச.6ம் தேதி நடக்கிறது

‘பாலக்காடு மாரத்தான்’ டிச.6ம் தேதி நடக்கிறது


UPDATED : நவ 01, 2026 05:30 PM

ADDED : நவ 01, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 05:30 PM ADDED : நவ 01, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு: ‘பாலக்காடு மாரத்தான்’ போட்டி டிச. 6ம் தேதி நடக்கிறது.

பாலக்காட்டில் ‘போர்ட் ரன்னர்ஸ் கிளப்’ சார்பில் ‘பாலக்காடு மாரத்தான்’ போட்டி, டிச. 6ம் தேதி நடக்கிறது. இதில், 21.1 கி.மீ., 'ஹாப் மாரத்தான்', 10 கி.மீ., மாரத்தான் போட்டிகளும், 5 கி.மீ., ‘பேமிலி பன்’ மராத்தான் ஓட்டமும் நடக்கிறது.

விக்டோரியா கல்லுாரியில் இருந்து துவங்கி நூறடி சாலை, தெற்கு மலம்புழா சென்று திரும்பி விக்டோரியா கல்லுாரி வந்தடையும் வகையில், இந்த மாரத்தான் நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, www.palakkadmarathon.com என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை, ‘போர்ட் ரன்னர்ஸ் கிளப்’ இயக்குனர் அஜய், தலைவர் ரவிகுமார், செயலாளர் நடராஜன், பொருளாளர் சஜின் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் விபரங்களுக்கு 98952 49385 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us