/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் இ--பாஸ் சோதனை: போலீஸ் பாதுகாப்பு
/
எல்லையில் இ--பாஸ் சோதனை: போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஏப் 02, 2025 10:11 PM

கூடலுார்; கூடலுார் வழியாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு, மாநில எல்லையில் இ-----பாஸ் சோதனை பணியின் போது பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்காலுக்கு அதிக வாகனங்கள் வந்து செல்வதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோர்ட் உத்தரவுப்படி, தினமும் எத்தனை வாகனங்கள், இப்பகுதிக்கு வந்து செல்கின்றன என்பதை கண்டறிய, கடந்த மே, 7ம் தேதி முதல் இ--பாஸ் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, ஏப்.,1 முதல், ஊட்டிக்கு வார நாட்களில், 6,000 வாகனங்களும்; இறுதி நாட்களில், 8,000 வாகனங்கள் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஏப்., 1 முதல் அமல்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கூடலுாரை ஒட்டிய, தமிழக கேரளா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், ஊட்டிக்கு வரும் வெளிமாநிலங்கள் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனையை, தீவிரப்படுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம், இப்பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடம், இ--பாஸ் எடுத்து வராத சுற்றுலா பயணிகள், சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழக-கேரள எல்லை களில் உள்ள சோதனை சாவடிகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், சுற்றுலா வாகனத்தின் பதிவு எண், வாகனத்தின் பெயர், இ--பாஸ் எண், பயணிகளின் எண்ணிக்கை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடுகாணி, தொரப்பள்ளி சோதனை பகுதியில், நேற்று இ--பாஸ் பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஊழியர்கள் கூறுகையில், 'கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சிலருக்கு இப்பிரச்னை ஏற்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் அவர்களுக்கு இ--பாஸ் கிடைத்தது,' என்றனர்.