ADDED : அக் 19, 2026 07:08 PM

பந்தலூர்: பந்தலூரில் நடந்த சாலை விபத்தில் முதியவரின் கால் எலும்புகள் முறிந்தது.
பந்தலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலன், 70, நேற்று இவர் தனது பைக்கில் தேவாலா பகுதியில் இருந்து பந்தலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, கேரளா மாநிலம் அம்பலவயல் பகுதியில் இருந்து பாண்டிகாடு பகுதிக்கு காரில் ஒரு குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர். தேவகிரி என்ற இடத்தில் பைக் மீது கார் மோதியதில், பைக்கில் வந்த பாலன் கால் பாதங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு எலும்புகள் நொறுங்கியது.
பாதிக்கப்பட்டவரை பந்தலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து, மேல் சிகிச்சைக்காக கேரளா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து கார் டிரைவர் முகமது யாசிர், 26, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
