ADDED : ஆக 02, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் ஓடி வந்த காட்டு யானையால் மக்கள் பீதியடைந்தனர்
குன்னுார்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காட்டேரி பண்ணை அருகே, வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை, நேற்று காலை,கே.எம்.எஸ்., வழியாக கடைவீதி மற்றும் உணவகங்கள் அமைந்த பகுதிக்கு வந்தது. சாலையை கடந்து வந்த இந்த யானையை கண்டு, அப்பகுதியில் இருந்த வாகன ஓட்டிகளும், மக்களும் அச்சத்திற்கு உள்ளாகினர். மக்கள் ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்,' என்றனர்.
