/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஓவேலி' மக்னா யானை உலா; அச்சத்தில் பொதுமக்கள்
/
'ஓவேலி' மக்னா யானை உலா; அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : ஆக 14, 2025 08:12 PM

கூடலுார்; மேல் கூடலுார் குடியிருப்பு பகுதியில் இரவில் உலா வரும் 'ஓவேலி' மக்னா யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் ஓவேலி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மக்னா யானை ஒன்று தினமும் இரவில் முகாமிட்டு, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானைக்கு, வனத்துறையினர் 'ஓவேலி' மக்னா யானை என பெயர் வைத்துள்ளனர்.
இந்த யானை, கடந்த இரண்டு நாட்களாக, மேல் கூடலுார் பகுதியில் முகாமிட்டுள்ளது. பகலில் தனியார் எஸ்டேட் பகுதியில் இருக்கும் யானை, இரவில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை மேல் கூடலுார் நடுக்கூடலூர் குடியிருப்பு பகுதியில் உலா வர துவங்கியுள்ளது. வனத்துறையினர், இதனை விரட்டினாலும், மீண்டும் வருகிறது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.